Contributions

Kanchi Karaikandeswarar Kodimaram A/C
A/C No. 4386000100911625
Punjab National Bank
Mylapore Branch.
Royapettah High Road
Chennai 600 004.

Address for Communication

Sri. S.V.K. Devan Chettiar,
23 Chetty Street, Kanchi 606702
Chengam Vattam, Thiruvannamalai Mavattam.
Telephone No. 9487231141, 9841722886

Sunday, January 10, 2010

பெரியநாயகி சமேத கரைகண்டேஸ்வரர்

சப்த கரைகண்டேஸ்வரரில் ஒன்றான காஞ்சி கரைகண்டேஸ்வரர் கோயிலின் ஸ்தல வரலாறு:

வாழப்பந்தல் கிராமத்தில் அம்பாள் தவத்தில் இருந்தபொழுது ஒரு மாலைப்பொழுதில் முருகப்பெருமானை தண்ணீர் எடுத்துவரப் பணித்தாள். முருகப்பெருமான் தன் வேலாயுதத்தை செங்கம் முதல் போளூர் வரை படர்ந்து இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலையில் செலுத்தினார். அங்கு தவம் செய்து கொண்டிருந்த ரிஷிகள் வேலாயுதத்தின் பெருமையால் மோக்ஷம் அடைந்து விட்டார்கள். ஆகவே மலையிலிருந்து தண்ணீர் குருதி ஆறாக பெருக ஆரம்பித்துவிட்டது.

இந்த ஆறு உமாதேவியின் விருப்பத்திற்கு ஏற்ப பரிசுத்தமான தண்ணீராக மாறிவிட்டது. இதனால் இந்த ஆறு முருகன் பெயரால் சேயாறு எனவும் குருதி பெருக்கால் செவ்வாறு எனவும் இப்பொழுது செய்யாறு எனவும் வழங்கப்படுகிறது.
செய்யாறுக்கு கிழக்கே இருக்கும் கோயில்களில் உள்ள சுவாமிக்கு கைலாசநாதர் என்றும் மேற்க்கே உள்ள கோயில்களின் சுவாமிக்கு கரைகண்டேஸ்வரர் என்ற பெயரும் உள்ளது.
முருகப்பெருமான் இந்த சப்த கரைகண்டேஸ்வரர்களை வணங்கி பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட்டார்.

கொடிமரம் நிறுவுதல்

காரண ஆகமத்தில் கொடிமரத்தை நிலைப்படுத்துவோர் சிறப்பான வாழ்வைப் பெற்று இறுதியில் சிவாயுஜ்யம் பெறுவர் என்று கூறப்பட்டு உள்ளது.


எந்த இடத்தில மிகுந்த பக்தி ச்ரத்தையுடன் சிறப்பான முறையில் த்வஜஸ்தம்பம் ஸ்தாபனம் செய்யப்படுகிறதோ, அங்கு அகால ம்ருத்யு பயம் இல்லை, காலத்தில் மழை பொழியும், சுபிக்ஷம் உண்டாகும், அனைத்து உயிர்களும் அமைதி பெறும்

செய்நன்றி மறந்தவன், பிரம்மஹத்தி தோஷம் உள்ளவன், பசுவதை செய்தவன், ஆகியோரும் த்வஜஸ்தம்ப நிறுவலை தரிசித்தால் பாபத்திநின்றும் விடுபடுகிறார்கள். உபயகர்தாக்களின் மூன்று தலைமுறைக்கும் இப்பலன் கிட்டும்.